இலங்கை செய்திகள்

வடக்கு முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

17 Feb 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாச நோய்க் காரணமாக யாழ். வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவாச நோய்க் காரணமாக நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த காலங்களில் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்க் காரணமாக பல தடவை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிசை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்