இலங்கை செய்திகள்

வடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து பிரதமர் ரணில் சம்பந்தனுடன் பேச்சு நடத்தவுள்ளார்

09 Aug 2018

வடக்கில் வீட்டுத் திட்டம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், “வடக்கில் வீட்டுத் திட்டம் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.

அதே போல் மேலதிகமாக 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டங்களையும் கையாண்டு வருகின்றோம். விரைவில் சகல மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும். அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்ப்போம். இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுத்தருவது அரசாங்கத்தின் பொறுப்பு” எனவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்