இலங்கை செய்திகள்

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகள் குறைந்ததாலேயே இந்திய மீனவர்கள் அத்துமீறுகின்றனராம்

12 Jul 2017

வடக்கு மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கை குறைவடைந்து செல்கின்றமையே, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு காரணமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு அதிகளவான மீன் லொறிகள் வந்ததாகவும் தற்போது இந்நிலை மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்கில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அளவுகூட வடக்கில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லையென குறிப்பிட்ட இராணுவ தளபதி, வடக்கில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் வலைவீசியே மீன்பிடிப்பதாகவும் படகுகளை பயன்படுத்துவதை குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வடக்கில் படகுகளை பயன்படுத்தி அதிகளவில் மீன்பிடியில் ஈடுபடுவதானது இந்திய மீனவர்களின் அத்துமீறலை குறைக்க உதவுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV