இலங்கை செய்திகள்

வடக்கில் திட்டமிட்ட போதைப் பொருள் திணிப்பு

23 Jun 2022

வடக்கில் திட்டமிட்ட போதைப்பொருள் திணிப்பிற்கு பின்னால் பொலிசாரும் இராணுவத்தினரும் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். இராணுவத்தில் உள்ள 20 சதவீதமான இராணுவ வீரர்கள் வடக்கிலேயே குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருந்தும் கூட எவ்வாறு அங்கு போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது? எனவும் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் புகுத்தப்படுகிறது , இதனால் அங்குள்ள இளைஞர்கள் பலரும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கான புனர்வாழ்வு நிலையங்கள் அங்கு இல்லை. எனவே அவற்றை விரைவாக அமைத்துத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam