உலகம் செய்திகள்

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் கொடுக்கவேண்டும்; ஜப்பான் தென்கொரியா ஒப்புதல்

13 Feb 2018

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டிய அவசியத்தினை தென்கொரிய அதிபர் மூன் உடனான சந்திப்பில் ஜப்பான் பிரதமர் அபே உறுதி செய்துள்ளார்.

வடகொரியா அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.  இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஐ.நா. அமைப்பும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இதில் வடகொரியாவின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்காக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டுள்ளார்.  அதன்பின்னர் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே சந்தித்து பேசினார்.  இதில் வடகொரியா விவகாரம் பற்றி பேசப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அபே, வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதனை மூனிடம் உறுதி செய்த தகவலை வெளியிட்டார்.

இரண்டாம் உலக போரில் ஜப்பான் ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான முறையான ஒப்பந்தம் ஒன்றும் மாற்றம் செய்ய முடியாத முறையில் தென்கொரியாவுடன் இறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் அபே கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV