உலகம் செய்திகள்

வடகொரியாவிலிருந்து ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதிலடி!

22 Sep 2022

வடகொரியாவிலிருந்து உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள் ரஷியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில், உக்ரைன் போரால் ரஷியாவின் ஆயுத இருப்பு குறைந்துவிட்டதாக வடகொரியாவிடம் தெரிவித்து, அங்கிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யப் போவதாக ரஷியா தெரிவித்தது.

மேலும், ஈரானிடம் இருந்து ராணுவ ஆளில்லா விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆகவே வட கொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை ரஷியா வாங்கிக் கொண்டிருந்தது.

இவற்றின் மூலம் ரஷியா கடும் நெருக்கடியில் இருந்தது தெரிகிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கூறப்பட்டது.

இதனிடையே, ரஷியாவிற்கு ஆயுதம் வழங்கவில்லை என வடகொரியா மறுத்துள்ளது.

வடகொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி கூறியதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்களையோ வெடிமருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை. அவற்றை ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிட மாட்டோம்.

ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வந்தனர். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறோம்.அதேவேளையில், இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam