சினிமா செய்திகள்

லேட் ஆனாலும் நயன்தாராவுக்கு கியூட்டான வாழ்த்து சொன்ன சமந்தா

11 Jul 2018

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாராட்டுக்களையும் பெற்றது. ஜூலை 5-ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தெரிவித்திருப்பதாவது,

`இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்