உலகம் செய்திகள்

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி திடீர் ராஜினாமா

04 Nov 2017

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபானின் நாட்டில்  சாத் அல் ஹரிரி கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.  லெபனான் நாட்டில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருவதால் தான் கொல்லப்படும் என அபாயம் இருப்பதால் அவரது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத் ஹரிரி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,  முன்னாள் பிரதமர் ரபிக் அல்-ஹரிரி படுகொலைக்கு முன்னர் நிலவிய சூழலில் இப்போது நாம் வாழ்கின்றோம். என்னை கொலை செய்ய ரகசியமாக  திட்டமிட்டுருப்பதாக நான் உணர்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV