கனடா செய்திகள்

லிபரல் கட்சியும், புதிய ஜனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா?

16 May 2018

 

லிபரல் கட்சியும், புதிய ஜனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக் கூற மறுத்துள்ளனர்.

அது குறித்து தற்போதைக்கு தாம் கருத்துக்கூற விரும்பவில்லை என்று தேர்தல் பரப்புரைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கும் லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின் மற்றும், புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் ஆகியோர் கூறியுள்ளனர்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்களும்,  தேர்தல் முடிவுளுக்கு முன்னர் இது தொடர்பில் தீர்க்கமாக எதனையும் கூற முடியாது என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV