கனடா செய்திகள்

லிபரல் கட்சிக்கான ஆதரவு வலுக்கின்றது

13 Sep 2021

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் லிபரல் கட்சிக்கான ஆதரவு வலுப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, றொரன்டோ பெரும்பாக பகுதியில் லிபரல் கட்சிக்கான ஆதரவு 39 வீதமாக காணப்படுகின்றது.

இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சிக்கான ஆதரவு 33 வீதமாக காணப்படுகின்றது என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சிக்கு 15 வீத ஆதரவும், கனேடிய மக்கள் கட்சிக்கு 10 வீத ஆதரவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam