கனடா செய்திகள்

லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோ அரசாங்கம் வழக்குத் தாக்கல்

15 Apr 2019

சர்ச்சைக்குரிய கார்பன் வரி தொடர்பாக லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோ அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மாகாண உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் ஒன்ராறியோவில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் முதல்வர் டக் ஃபோர்டு அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை ஒட்டாவாவின் புதிய கார்பன் வரித் திட்டம் சட்டவிரோதமானது என சட்டமா அதிபர் கரோலின் முல்ரனி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்