இலங்கை செய்திகள்

லண்டனில் பிரதமர் ரணிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மூவர் கைது

11 Oct 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் முக்கியமான மூன்று பேர் லண்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையின் பொறுப்பாளர் சொக்கலிங்கம் உட்பட மூன்று உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புலிகளின் கொடியை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக் காரர்கள் இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பாக இருந்த போதிலும் பிரித்தானியப் பொலிஸார் அதற்கு ஆர்ப்பாட்டம் நடாத்த இடமளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்