கனடா செய்திகள்

றிச்மண்ட்ஹில்லில் வெடிபெருட்களுடன் இருவர் கைது

15 May 2019

றிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு வீட்டில் வெடிக்கும் பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்கவைக்கும் தூண்டிகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

47 வயதான ரெசா மொஹமதியாலும்( Reza Mohammadiasl ) 18 வயதான அவரது மகனான மஹாருமே(Mahyar) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த கைதுகளினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்டேல்( Ralph Goodale) தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மாகாண பொலிஸ், யோர்க் பொலிஸின் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவினருடன் சேர்த்து, வெடி பொருட்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்