கனடா செய்திகள்

ரொறொன்ரோவில் றக்கூன் விலங்குகளால் அச்சம்

13 Feb 2018

ரொறொன்ரோவில் பொலிசார் மற்றும் நகரத்தின் மிருக சேவைகள் திணைக்களத்தினரும்  இணைந்து பல றக்கூன்களை சுற்றி வளைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலங்குள் வெறி விலங்குத் தொற்றை கொண்டுள்ளன என நம்புவதே காரணமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை நிரூபிக்க கூடிய சம்பவம் கடைசியாக ஸ்காபுரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்காபுரோ பகுதியில் ஞாயிற்றுகிழமை ஒருவரை காலை வீதியில் றக்கூன் ஒன்று துரத்தியுள்ளது என பொலிசாரின் தகவல் பிரகாரம் தெரியவந்துள்ளது.

துரத்திய றக்கூன் மனிதனை கடித்துள்ளதாக கருதப்படுகின்றது. ஆனால் ரொறொன்ரோ மிருக சேவைகள் மனிதனின் சப்பாத்தை மட்டுமே றக்கூன் தொட்டதாக தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட  றக்கூனும் வேறு பலவும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக நடந்து கொண்டதாகவும் சோதனைக்காக இவைகளை மிருக சேவைகள் அதிகாரிகள் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட றக்கூன் வெறி விலங்குத் தொற்றை கொண்டுள்ளதாக தான நம்புவதாக ஸ்காபுரோ நபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த மிருகங்கள் டிஸ்ரெம்பர் எனப்படும் ஒரு வைரஸ் நோயை கொண்டுள்ளதாகவும் இவை இதே போன்ற அறிகுறிகளை காட்டும் எனவும் மிருக சேவைகள் தெரிவிக்கின்றன.

றக்கூன் இனத்தில் இத்தகைய வைரஸ் காணப்படுமாயின் இவை மிகவும் தொற்றக் கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவில் இதுவரை றேபீஸ் நோய் கண்டறியப்படவில்லை எனவும் ஹமில்ரன் பகுதியில் மிருகங்களிடத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ரொறொன்ரோ பொலிசார் மிருகங்கள் குறித்து மிக கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை எச்சரிக்கின்றனர்.

ஸ்காபுரோ சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட றக்கூன் கருணை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்