கனடா செய்திகள்

ரொறன்ரோவில் வீட்டு விலைகள் வீழ்ச்சி

11 Jul 2017

ரொறன்ரோ வீட்டு விலைகள் கடந்த ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம், ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 37.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சராசரியாக 9 லட்சத்து 20 ஆயிரம் டொலர்களாக இருந்த வீட்டு விலைகள் தற்போது 8 லட்சம் டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முதல் ஒன்ராறியோ மாகாண அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 15 சதவீத வரி விதிப்பே இத்தயை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV