கனடா செய்திகள்

ரொறன்ரோவில் தேடப்பட்ட கொலை சந்தேக நபர் கைது

13 Oct 2021

கடந்த மாதம் Etobicoke இல் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட சந்தேக நபரை ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜான் கார்லேண்ட் புலவர்ட் மற்றும் மார்ட்டின் குரோவ்(john garland and martin grove) சாலையில் செப்டம்பர் 29ம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவலையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார், 26 வயதான Khalid Jama என்பவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், புதன்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில்,

குறித்த கொலை வழக்கில் தொடர்புடைய 26 வயது Salah Abukar என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், Salah Abukar என்பவருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam