கனடா செய்திகள்

ரொறன்ரோவில் தமிழ் இலக்கிய இயல் விருது விழா

11 Jun 2019

தமிழ் இலக்கிய இயல் விருது விழா 2018 நிகழ்வு நேற்று(ஜீன் 9) ரொறன்ரோவில் இடம்பெற்றது.

 

நேற்று நடைபெற்ற இயல் விருது விழாவில் 2018 ஆம் ஆண்டு விருது பெறும் படைப்பாளிகளாக பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
 2018 ஆம் ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் சிறந்த புனைகதைக்கான விருது நடுகல் நாவலுக்காக தீபச்செல்வனுக்கு வழங்கபட்டது.

 

அத்துடன் புனைவுக்கான விருது காகம் கொத்திய காயம் என்ற கட்டுரை நூலுக்காக உமாஜிற்கும் சிறந்த கவிதைக்கான விருது சிறிய எண்கள் தூங்கும் அறை என்ற கவிதை நூலுக்காக தமிழகக் கவிஞர் போகன் சங்கருக்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்திலிருந்து தமிழுக்கு பீரங்கி பாடல்கள் என்ற நூலை மொழி பெயர்த்த இரா.முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்