கனடா செய்திகள்

ரொறன்ரோவில் குடியிருப்புகளின் விற்பனை சரிவு

04 Aug 2022

ரொறன்ரோ பகுதிகளில் குடியிருப்புகளின் விற்பனை 47% சரிவடைந்துள்ளதாக தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியம் வியாழக்கிழமை வெளிப்படுத்தியுள்ள தகவலில், கடந்த மாதம் 4,912 குடியிருப்புகள் விற்பனையானது, ஜூலைக்கு முன் கை மாறிய 9,339 வீடுகளில் கிட்டத்தட்ட பாதியாகும்,

மேலும் இது ஆண்டின் முதல் பாதியிலும் 2021 இறுதியிலும் காணப்பட்ட அசுரத்தனமான வேகத்தில் இருந்து சந்தை தளர்வடைந்துள்ளதைக் குறிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, கனடாவின் முக்கிய வட்டி விகிதமானது ஜூலை நடுப்பகுதியில் ஒரு சதவீத புள்ளி அதிகரிக்கப்பட்டது, இது 24 ஆண்டுகளில் நாடு கண்டிராத மிகப்பெரிய உயர்வாகும்.

இதுவே வீடு வாங்கும் எண்ணத்தில் இருந்த மக்களை பின் வாங்க வைத்துள்ளது. கடந்த மாதம் வீடு ஒன்றின் சராசரி விலையானது 1,074,754 கனேடிய டொலர் என இருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் இருந்த விலையில் 6% சரிவடைந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam