கனடா செய்திகள்

ரொறன்ரோவில் காணாமல் போன தமிழர் சடலமாகவே மீட்கப்பட்டார்

12 Jun 2018

ரொறன்ரோவில் காணாமல் போன தமிழர் ஒருவர் இறந்து போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை ரொறன்ரோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனாலும் அவர் இறந்து போன நிலையில் பூங்கா ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று முன்னர் தகவல் வெளியாகி இருந்த நிலையில், உயிரிழந்தவாறு மீட்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV