கனடா செய்திகள்

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியினால் பதற்றம்

12 Jun 2019

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று காணப்பட்டதனை அடுத்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Bay Street மற்றும் Wellington Street பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் ஆண்கள் கழிவறையில் குறித்த இந்த மர்மப் பொருள் காணப்பட்டதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் மின் தூக்கிகள் அனைத்தினதும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தியதுடன், அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு சிறப்பு பிரிவினரும் அங்கு அழைக்கப்பட்டு, குறித்த அந்த பொருள் பரிசோதிக்கப்பட்டு, முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்தப் பொதி செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்காக அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போதிலும், தற்போது அந்தப் பகுதி பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்