கனடா செய்திகள்

ரொரன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன்  நீரில் மூழ்கி மரணம்

12 Mar 2018

ரொரன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன்  நீரினுள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

லேக் லூயிஸ் பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டிய தூரத்தில் உள்ள கோல்டன் எனப்படும் நகருக்கு சற்று வெளியே உள்ள பகுதியில்  இந்த துயரச் சம்வம் இடம்பெற்றுள்ளது.

சுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் ஒருவர் மூழ்கிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை என்று கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்