கனடா செய்திகள்

ரெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

10 Jan 2019

ரெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்ஹூர்ட் டிரைவ் மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு சென்ற பொலிஸார், கடுமையான காயத்திற்கு உள்ளாகியிருந்தவரை அவசர மருத்துவ பிரிவினரின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புபட்ட வெள்ளை நிற ஹொண்டா வாகனம் அந்த இடத்தை விட்டு சென்றதை பொலிஸார் சி.சி.ரி.வி. காணொளி மூலம் கண்டுகொண்டனர்.

இருப்பினும் சந்தேகநபர் குறித்த எந்த தகவல்களையும் வெளியிடாத ரொறன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்