இந்தியா செய்திகள்

ரூ.10 கோடி மதிப்புள்ள கடத்தி வரப்பட்ட மருந்து பொருள் பறிமுதல்

13 Aug 2017

சீனாவின் சான்டோங் மாகாணத்தில் இருந்து மியான்மர் எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள ‘வைட்டமின் சி’ மருந்து(அஸ்கோர்பிக் அமிலம்) கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மிசோரம் மாநில எல்லையில் உள்ள சவுகத்தார் என்னும் இடத்தில் வந்த சில லாரிகளை மறித்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவற்றில் 122.5 டன் எடையுள்ள வைட்டமின் சி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மருந்தை வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், சரக்கு சேவை வரி விதிப்பில் இருந்து தவிர்ப்பதற்காகவும் கடத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

‘‘இவ்வளவு எடை கொண்ட மருந்தை முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும் என்றால் ரூ.3 கோடியே 54 லட்ச ரூபாய் சுங்கவரி செலுத்தவேண்டியது இருக்கும். எனவேதான் வரி ஏய்ப்பு செய்வதற்காக இவற்றை ரகசியமாக கடத்தி வந்துள்ளனர்’’ என்று வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்