இந்தியா செய்திகள்

ரிசார்ட் ரகசியம் அம்பலம்!

17 Feb 2017

ஜெ.,மரணத்திற்கு பிறகு சசிகலா முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சென்னையை அடுத்த கூவத்தூர் தீவு ரிசார்ட்டில் தங்க வைத்தார். 

பன்னீர்செல்வம் பக்கம் யாரும் சென்று விடாதபடி ரிசார்ட்டை சுற்றி அடியாட்கள் வைத்து எம்.எல்.ஏ.,க்களை பாதுகாத்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளே செய்து கொடுக்கப்பட்டது. அதையும் மீறி ஒரு சில எம்.எல்.ஏ.,கள் மாறுவேடத்தில் தப்பி சென்ற சம்பவமும் நடந்தது. 

இந்நிலையில், சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அவசர அவசரமாக முதல்வர் பதவிக்கு தனது குடும்ப உறுப்பினர்களில் யாரையாவது தேர்வு செய்ய முடிவு செய்தார். 

ஏற்கனவே தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு எதிர்ப்பு இருப்பதால் ஆறுமாதம் கழித்து குடும்பத்தில் ஒருத்தரை முதல்வராக்கலாம். தற்காலிகமாக எடப்பாடியாரை முதல்வர் ஆக்கலாம் என முடிவு செய்தார்.

 அதன்படி எடப்பாடியார் முதல்வர் ஆனார். அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பான்மை நிருபிக்கவேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். 

தாமத படுத்தினால் எம்.எல்.ஏக்கள் பன்னீர் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதால், நாளை 18ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க சசி அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு தீவு ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் பேரம் பேசபட்டது. 

அட்வான்சாக நேற்று இரவு ஒரு கோடி ரூபாய் பணமும் ஒரு கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. மீதி 19கோடி ரூபாய் பணம் அடுத்த ஒரு வருட ஆட்சியில் ஆதரவு தருவதன் அடிப்படையில் மாதா மாதம் தவணை முறையில் மிடாஷ் நிறுவனம் மூலம் எம்.எல்.ஏக்கள் தொகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. 

மொத்தமாக பணம் கொடுத்தால் வருமான வரித்துறையிடம் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த நூதன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக எம்எல்ஏக்கள் தரப்பு செய்திகள் கூறுகிறது. 

சசிகலா சிறை செல்லும் முன், ‘தனது சொத்துகள் அனைத்தும் காலியானாலும் பரவாயில்லை. ஆனால் ஆட்சியை மட்டும் கைவிட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தி கூறியதாக தெரிகிறது. குறிப்பாக டிடிவி தினகரனிடம் சொல்லி சென்றதாக கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில் தான் இந்த பேரம் பேசப்பட்டு  ஆட்சி அமைக்கவுள்ளனர் என அ.தி.மு.க.,வட்டார தகவல் அம்பலமாகியுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்