இந்தியா செய்திகள்

ராகுல் காந்தியை வாழ்த்திய மோடி!

19 Jun 2017

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராகுல் காந்தி தற்போது, இத்தாலியில் உள்ளார். அங்கு தனது உறவினர்களுடன் அவர் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

 இந்நிலையில், ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியுடத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். தற்போது, காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி, விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்