இலங்கை செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பிலான மேன்முறையீட்டு மனு ஓக்ஸ்ட் மாதம் விசாரணைக்கு வருகின்றது

13 Jun 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஓகஸ்ட் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்டு நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து கடற்படை வீரர்களில் மூன்று பேர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூரிகள் சபையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கடற்படை வீரர்கள் நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று இந்த மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்