இலங்கை செய்திகள்

ரயில் பாதையில் பயணித்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

25 May 2023

ரயில் பாதையில் பயணித்த இரு இளைஞர்கள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வதுரவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெயாங்கொட வதுரவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலையில், காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ ரயில் நிலையத்தை நோக்கி புகையிரத பாதை வழியாக நடந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரும் தொலைபேசி அழைப்பில் இருந்த போது, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam