இலங்கை செய்திகள்

ரயில் சேவை ஜூலை முதல் மீண்டும் ஆரம்பம்

25 May 2023

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான ரயில்  சேவையை மீண்டும்  ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர்  அசோக முனசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில்  பாதை  திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே  இடம்பெற்று வருகின்றன இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில்  சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam