இலங்கை செய்திகள்

ரணில், மஹிந்த நேற்றிரவு நாடு திரும்பினர்

14 Sep 2018

மூன்று நாட்கள்  விஜயமாக கடந்த 10 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின்,  ஹனோய் நகரில் இடம்பெற்ற ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதேவேளை, பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று கடந்த 10 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவும் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்