இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க இன்று பதவி விலகுகின்றார்..?

13 Feb 2018

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் இன்று விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினால் இலங்கை அரசியலில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று ரணில் பதவி விலகுவார் என்ற தகவல் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்தே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த அணியினர் பெருவெற்றி அடைந்ததையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தங்களது கட்சிக்குள்ளேயே கடும் அழுத்தங்கள் தோன்றியுள்ளன.

இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் ரணில் விக்கிரமசிங்க விலகுவதற்கு முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பிலான உறுதியான தகவல்கள் இன்று வெளியாகலாம் என எதிர்பாரக்கப்படுகின்றது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்