இலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது

13 May 2022

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக  ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam