சினிமா செய்திகள்

ரசிகர்களுடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த எஸ்.ஜே.சூர்யா

15 Sep 2023

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam