கனடா செய்திகள்

யோர்க் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

10 Aug 2019

ரொறன்ரோவின் கிழக்கு யோர்க் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.

வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ கானர் டிரைவில் நேற்று மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தின் போது தப்பிச் சென்றவரை அடையாளங்காட்ட உதவுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்