இலங்கை செய்திகள்

யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

02 Aug 2017

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் சமூகத்தில் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களது மனப்பாங்கு இன்னமும் மாறவில்லை. நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படாத நிலையில் எங்கோ ஒரு மூலையில் பயங்கரவாதம் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது.

அந்த வகையில் அவர்களில் ஒரு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தான் ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. நிறுத்தப்பட வேண்டும்.

பொலிஸார் பக்கத்திலும் பிரச்சினை இருக்கின்றது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரச அதிகாரிகளும் மக்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV