இலங்கை செய்திகள்

யுத்தத்தின் மூலம் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்ற நடவடிக்கை

11 Jan 2019

யுத்தத்தின் மூலம் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாதம்பே பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக அக்குறிகோளை நிறைவேற்றிக்கொள்ளவே சிலர் முயன்று வருவதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

குறித்த அரசியலமைப்பு, நாட்டை  நிச்சயம் பிளவுப்படுத்துமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமெனவும் மஹிந்த வலியுறுத்தியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்