இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையின் தீர்மானங்கள் பொதுமக்களை சென்றடைவதில்லை - வரதராஜா பார்த்திபன்

14 Mar 2019

யாழ். மாநகர சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முறையாக பொதுமக்களை சென்றடைவதில்லை என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபையில் பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், அத்தீர்மானங்களின் பயன்கள் எதுவும் பொதுமக்களை சென்றடைவதில்லை எனத் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி, நிர்வாக சீர்கேடுகள் நிறைந்து காணப்படுவதாக தெரிவித்த அவர், அதனை சீர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்