இலங்கை செய்திகள்

யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவிற்கு எதிராக வழக்கு

25 Jan 2023

யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் நேற்று (24) யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கட்டளைச் சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்து விட்டுச் சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசுரித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam