இலங்கை செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் வாகன பவனி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது

14 Mar 2019

மக்கள் பிரதிநிதிகளை இனியும் நம்பியிருக்காது மக்கள் போராட்டத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலை மாணவர்களின் எழுச்சி பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையிலான வாகன பவனி இன்று  கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.

தமிழின இழப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியொன்றை யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கவுள்ளது.

இந்த எழுச்சி பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதரவைத் திரட்டும் நோக்கில் வட மாகாணம் தழுவிய வாகன பவனியொன்றை பல்கலை மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பவனி யாழ். மாவட்டம் முழுவதும் பயணித்து இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளது.  இந்த வாகன பவனி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஊடாக வவுனியா நோக்கி பயணிக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்