இலங்கை செய்திகள்

யாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்

26 Feb 2019

யாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா்.

இந்த விபத்து ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இன்று நடைபெற்றது.

சாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வாகையடியில் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மூவர் கை கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மந்துவில் மேற்கு கொடிகாமம், மீசாலை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது..






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்