இலங்கை செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை

07 Dec 2017

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி நாளை  8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்தாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“யாழ்.பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடத்தப்படவுள்ளன. முதலாவது பகுதி எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், இரண்டாவது அமர்வு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் நடத்தப்படும்.

இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்” எனக் கூறினார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்