இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது

26 Mar 2020

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,  வடமாகாணத்தின் ஏனைய 4 மாவட்டங்களான, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம்  நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.  இந்த 4 மாவட்டங்களிலும் பின்னர் மாலை 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலாகும். 

வட மாகாணம் முழுவதும்  நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்ட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்