இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் - சஜித் பிரேமதாச

08 Nov 2019

தேர்தலுக்குப் பிறகு யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைப் பெற்று, விசேடமான கூட்டத் தொடரை நடத்தி அபிவிருத்தியின் உச்சக் கட்டத்தில் திகழும் வடக்கு கிழக்கு மாகாணங்களாக மாற்றியமைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒன்றாய் முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்.கிட்டுப் பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, இன்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்