24 Jan 2023
யாழ்ப்பாணத்தில் உள்ள ‘ஆவா’ குழுவிற்கும் ’கேணி’ குழுவிற்கும் இடையில் சுன்னாகம் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்தியில் இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் கார் மற்றும் கெப் வண்டியுடன் இன்று (24) நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் கார் மற்றும் கால் டாக்சி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தன.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில், அவ்விரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீதியில் பயணித்த பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.