இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பயணிகள் படகு விபத்து

24 May 2023

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் வரையிலும் பயணித்த பயணிகள் படகு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. அதில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து சமுத்திராதேவி என்ற பயணிகள் படகு, குறிக்கட்டுவானை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. எனினும், கடலின் இடைநடுவில் அந்தப் படகின் சுங்கான் செயற்படவில்லை. இதனால், அந்தப் படகு மூழ்கும் அபாயத்தில் இருந்ததாக பயணிகள் அச்சமடைந்தனர்.

இது ​தொடர்பில் இலங்கை கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து, விரைந்து செயற்பட்ட கட​ற்படையினரும் மீனவப் படகுகளும், சமுத்திராதேவி படகில் இருந்த 70 பயணிகளை காப்பாற்றி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு அழைத்துச் சென்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam