இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவன் கைது

11 Jul 2018

யாழ் நகர்ப் பகுதியில் வைத்து ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்