இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் மரணம்

14 Mar 2019

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்