இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சைக்கிள் பயணம்

05 Aug 2022

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தனர். குறித்த பயணமானது இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த சைக்கிள் பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களே இவ்வாறு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam