இலங்கை செய்திகள்

யாழ்நகரில் வாள்வெட்டு- இருவர் காயம்

26 May 2023

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam