இலங்கை செய்திகள்

யாழில் மீன்பிடித்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது

12 Feb 2019

யாழ்.குடாநாட்டில் மீன்பிடித்துறை 2016ம், 2017ம் ஆண்டுகளை விடவும் 2018ம் ஆண்டு பாாியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்கள தகவல்கள் தொிவிக்கின்றன.

இலங்கையில் அதிக மீன்பிடி உற்பத்தியைப் பெற்றுக்கொண்ட மாவட்டமான யாழ்ப்பாணக் குடாநாடு போரிற்கு முன்னர் 1983ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 677 மெற்றிக்தொன் கடல் உற்பத்தி பெறப்பட்டுள்ளது. இதன் பின்னர் கூடிய உற்பத்தியாக 2016ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 476 மெற்றிக் தொன் உற்பத்தி பெறப்பட்ட நிலையில் கடும் முயற்சியின் பயனாக 2017 ஆம் ஆண்டில் 43 ஆயிரத்து 683 மெற்றிக் தொன் உற்பத்தியாக அதிகரிக்கப்ப ட்டது. 

இவ்வாறு திணைக்களம் , மீனவர்களின் முயற்சியால் அதிகரிக்கப்பட்ட உற்பத்தியானது 2018ஆம் ஆண்டு மீண்டும் 3 ஆயிரத்து 220 மெற்றிக் தொன் வீழ்ச்சியடைந்து 40 ஆயிரத்து 401 மெற்றிக் தொன் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

இதேநேரம் இவ்வாறு 2017 ஆம் ஆண்டிற்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடையில் 3 ஆயிரம் மெற்றிக் தொன்னிற்கும் அதிக உற்பத்தி குறைந்தமை தொடர்பில் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது , உண்மையில் 2017 ஆம் ஆண்டு உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளவே கடுமையாக முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் 2018ஆம் ஆண்டில் பல நாட்கள் புயல் எனவும் அதன் பின்னர் கடும் மழை எனவும் மீனவர்கள் கடலிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாகவும் அதிக உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. எனப் பதிலளித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்