கனடா செய்திகள்

மோசமான விமான நிலையங்களில் ஒன்றாக பியர்சன்

23 Sep 2022

ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் மோசமான விமான நிலையங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் திருப்தி நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கா ணப்படும் விமான நிலையங்கள் மிக மோசமான ஐந்து விமான நிலையங்களில் ஒன்றாக பியர்சன் விமான நிலையம் கருதப்படுகின்றது.

கனடாவின் சன நெரிசல் மிக்க விமான நிலையங்களில் ஒன்றாக பியர்சன் சர்வதேச விமான நிலையம் கருதப்படுகின்றது.

வருடாந்த வாடிக்கையாளர் திருப்தி குறித்த கருத்து கணிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 20 பெரிய விமான நிலையங்களின் பட்டியலில் கனடாவின் பியர்சன் விமான நிலையம் 16ஆம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானங்களை தரித்து நிறுத்த கூடிய வசதி விமான பயணிகள் தரையிறங்குதல் விமானத்தில் பயணம் செய்தல் பாதுகாப்பு பரிசோதனை பொது பரிசோதனை உணவு பானம் சில்லறை கடைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்கள் நீண்ட வரிசைகள் காத்திருக்க நேரிடுவதாகவும் உரிய வகையில் சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் பியர்சன் விமான நிலையம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam